கொரோனாவால் உயிரிழந்த 30,200 குடும்பத்திற்கு 50000 நிவாரணம் வழங்க உத்தரவு!

கொரோனாவால் இறந்தவர்கள்

சில மாதங்களுக்கு முன்பு கண்ணுக்கே தெரியாமல் மனிதனுக்குப் பெரும் பாதிப்பினை உண்டாக்கி இறுதியில் உயிரிழப்பை உருவாக்கியது கொரோனா வைரஸ்.இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாகிக்கொண்டே இருந்தது.

உயர்நீதிமன்றம்

எனவே ஒவ்வொரு மாநில அரசும் தனது மாநிலத்தில் கடுமையான விதிமுறைகளை விதித்தனர்.குறிப்பாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இதனால் தற்போது இந்தியாவில் இந்த கொரோனா  நோயின் பரவல் குறைவாக காணப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த கொரோனா  நோய்க்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை சற்று அதிகமாகவே உள்ளது. ஒவ்வொரு மாநில அரசும் கொரோனா  நோய் காரணமாக உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு நிவாரண தொகையை வழங்கினர்.

இதுகுறித்து உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.அதன்படி தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 50,000 வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 30 ஆயிரத்து 200 குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூடுதலாக நிவாரணம் வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசு தெரிவிக்குமாறு உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

இவை கொரோனாவால்  பெற்றோர்களை இழந்த குழந்தைகள் மற்றும் குழந்தைகளை இழந்த பெற்றோர்களுக்கு மிகவும் பிரயோஜனமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print