மஞ்சள் நிற அட்டைதாரர்களுக்கும் 5000 ரூபாய் வெள்ள நிவாரண நிதி புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு!

இந்தியாவில் அக்டோபர் மாதம் இறுதியில் தென்மேற்கு பருவக்காற்று முற்றிலும் அகன்று வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியது. வடகிழக்கு பருவ மழை தொடங்கியது முதலே தென்னிந்தியா முழுவதும் அதி தீவிர கனமழை பெய்து வருகின்றன.

ரங்கசாமி

அவை தற்போது வரையிலும் தொடர்ந்து கனமழை நீடித்து உள்ளன. இதில் நம் தமிழகத்தின் வட மாவட்டங்கள், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்கியது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல தேங்கியது.

இதனால் தமிழகத்தில் வெள்ள நிவாரண தொகையாக 2000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் புதுச்சேரி மாநில அரசோ மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடும்ப அட்டை ஒன்றுக்கு ரூபாய் 5000 நிவாரணமாக வழங்கப்படும் என்று கூறியிருந்தது.

இந்த நிலையில் புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் 5,000 ரூபாய் நிவாரணம் மஞ்சள் நிற அட்டை தாரர்களுக்கு பொருந்தும் என்று கூறியுள்ளார். இதனால் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரர்களும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment