பொங்கல் பரிசாக ரூபாய் 5000 மா? இந்த ஐடியா சூப்பரா இருக்குதே!

தமிழகத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு திமுக ஆட்சியின் சார்பாக பொங்கல் தொகுப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தைப்பொங்கல் என்றாலே மக்கள் நினைவிற்கு முதலில் வருவது செங்கரும்பு மட்டும் தான். இந்த விடியா அரசின் பொங்கல் தொகுப்பில் செங்கரும்பு இடம் பெறாதது ,செங்கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளின் தலையில் இடி விழுவது போல் உள்ளது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டன கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

நாங்கள் ஆட்சியில் இருந்த போது எங்களிடம் கேட்டபடி இந்த அரசு தை பொங்கலுக்கு ரூபாய் 5000 ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பில் முழு செங்கரும்பையும் வழங்க வேண்டும் என வலியுறுத்துயுள்ளார்.

சொன்னதை செய்வோம் செய்வதை சொல்வோம் என்று வாய் வீரம் காட்டும் முதலமைச்சர் அவர்கள் நாங்கள் ஆட்சியில் இருந்த போது கேட்டத்தை தற்போழுது நிறைவேற்றுமாறு வலியுறுத்துயுள்ளார்.

டிசம்பர் 31 தான் கடைசி நாள்! சலுகைகளுக்கு முந்துங்கள்!

பொங்கல் தொகுப்பில் ரூபாய் 5000 ரொக்கத்துடன் முழு செங்கரும்பையும் 2 கொடியே 19லட்சம் அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்க வேண்டும் ஏன் அதற்காக அறிவிப்பை உடனே வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.