கொட்டும் மழையில் கொட்டும் நிவாரணம்: ஒரு ரேஷன் கார்டுக்கு 5,000 ரூபாய்!

இந்தியாவில்  வடகிழக்கு பருவமழை காலம் நிகழ்கிறது.பெரும்பாலும் இந்த வடகிழக்கு பருவமழை தென்னிந்திய மாநிலங்களுக்கு அதிக மழைப் பொழிவு தரும். இதன் விளைவாக  தமிழகத்தில் அதிக மழைப்பொழிவு கிடைத்தது.

மழை

இவை தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலமான புதுச்சேரியில் கனமழை கொட்டித் தீர்த்தது. அதன்படி புதுச்சேரியில் மொத்தம் 84 பாசன ஏரிகளில் உள்ள 54 பாசன ஏரிகள் நிரம்பி உள்ளதாக அந்த மாநில அரசு கூறியுள்ளது.

புதுச்சேரியில் பருவமழையின் இயல்பான மழை அளவு 134 சென்டிமீட்டர் ஆகும். ஆனால் இந்த ஆண்டு 184 சென்டிமீட்டர் மழை கிடைத்துள்ளது. இதனால் அங்கு விளை நிலங்கள், வீடுகள் என பலவும் மழையால் பாதிக்கப்பட்டது.

புதுச்சேரி

இந்த நிலையில் புதுச்சேரி மாநில அரசு நிவாரண நிதியை அறிவித்துள்ளது. அதன்படி புதுச்சேரியில் மழையால் சேதமடைந்த வீடுகளுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் நிவாரணம் அளிக்க மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

பாதிப்படைந்த விளைநிலங்களுக்கு ஒரு ஹெக்டருக்கு ரூபாய் 20 ஆயிரமும் வழங்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.மழையால் பாதிக்கப்பட்ட கட்டுமான தொழிலாளர், மீனவர்களுக்கு குடும்ப ரேஷன் கார்டுக்கு 5,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் புதுச்சேரி மாநில அரசு அறிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment