Connect with us

ராகுல் காந்தி உள்பட 5000 காங்கிரஸார் டுவிட்டர் பக்கங்கள் முடக்கம்!

News

ராகுல் காந்தி உள்பட 5000 காங்கிரஸார் டுவிட்டர் பக்கங்கள் முடக்கம்!

44fc6dce31ea58090bb0b5656cfbb580

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மற்றும் 5000 காங்கிரசார்களின் ட்விட்டர் பக்கங்கள் திடீரென முடக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி டுவிட்டர் பக்கம் சமீபத்தில் முடக்கப்பட்டது என்பது தெரிந்ததே. மேலும் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கள் எம்எல்ஏக்கள் செய்தி தொடர்பாளர் என மொத்தம் 5000 காங்கிரஸ் பிரமுகர்கள் ட்விட்டர் பக்கங்கள் திடீரென முடக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டுவிட்டர் விதிகளை மீறியதால் காங்கிரஸ் கட்சியின் 5000 நபர்களின் டுவிட்டர் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு ட்விட்டர் நிர்வாகத்திற்கு காங்கிரசார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, அஜய் மக்கான், ஜிதேந்திர சிங், மாணிக்கம் தாகூர், சுஷ்மதா தேவ் ஆகியோர்களின் டுவிட்டர் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களும் டுவிட்டர் விதிகளை மீறியதாகவும் டுவிட்டர் நிராகம் விளக்கம் அளித்துள்ளது. ஆனால் மத்திய அரசின் உத்தரவு காரணமாகத்தான் டுவிட்டர் நிறுவனம் காங்கிரஸ் பிரமுகர்களின் டுவிட்டர் கணக்குகளை முடக்கி உள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top