Connect with us

500 டன் எடைகொண்ட சர்வதேச விண்வெளி மையம் சீனா, இந்தியா மீது விழும்!! – ரஷ்யா எச்சரிக்கை..

500 டன் எடைகொண்ட சர்வதேச விண்வெளி மையம் சீனா, இந்தியா மீது விழும்!! – ரஷ்யா எச்சரிக்கை..

கடந்த 3 நாட்களாகவே ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையே போரிட்டு வருகின்றனர். பல உலக நாடுகள் ரஷ்யா மற்றும் உக்ரைனை  எச்சரித்தும் ரஷ்யா வரம்பு மீறி தாக்கியுள்ளது.

இதனை கண்டித்து பல உலகநாடுகள் முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் சர்வதேச விண்வெளி மையத்தினை கண்காணிக்க ரஷ்யா மேற்கொண்டு வருகிறது.  இந்த சூழலில் ரஷ்யாவுக்கு அமெரிக்கா ஒத்துழைப்பு தரவில்லை என்றால் 500 டன் எடைகொண்ட சர்வதேச விண்வெளி மையம் இந்தியா, சீனா மீது விழும் என எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக ரஷிய விண்வெளித்துறை தலைவர் டிமிட்ரி ரோகொசின் தனது டுவிட்டரில் பக்கத்தில் கூறியதாவது:

அமெரிக்க அதிபரின் புதிய பொருளாதார தடைகள் ரஷிய விண்வெளி திட்டங்கள் உள்பட விண்வெளித்துறையில் பின்னடைவை ஏற்படுத்தும். நீங்கள் எங்களுடன் ஒத்துழைப்பு தர மறுத்தால், கட்டுப்பாடு இல்லாமல் அமெரிக்கா அல்லது ஐரோப்பா மீது பாகங்களாக விழும் சர்வதேச விண்வெளி நிலையத்தை யார் காப்பாற்றுவது? என கேள்வியெழுப்பியுள்ளார்.

இதனை தொடர்ந்து சுமார் 500 டன் எடைகொண்ட சர்வதேச விண்வெளி மையத்தின் பகுதி இந்தியா மற்றும் சீனா மீது விழ வாய்ப்பு உள்ளதால் நீங்கள் அவர்களை இவ்வாறு மிரட்ட விரும்புகிறீர்களா என தெரிவித்துள்ளார்.

மேலும், சர்வதேச விண்வெளி மையம் ரஷியாவுக்கு மேல் பறக்கவில்லை என்பதால் அனைத்து ஆபத்துகளும் உங்களுக்குதான். நீங்கள் அதற்கு தயாராக இருக்கிறீர்களா?
சர்வதேச விண்வெளி மையத்துடனான எங்களில் ஒத்துழைப்பை அழிக்க விரும்புகிறீர்களா என குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top