Connect with us

சுற்றுச்சூழலை பாதுகாக்க 500 மின்சார பேருந்து !! அமைச்சர் சிவசங்கர் தகவல்..

electric bus11 1

Tamil Nadu

சுற்றுச்சூழலை பாதுகாக்க 500 மின்சார பேருந்து !! அமைச்சர் சிவசங்கர் தகவல்..

சுற்றுச்சூழலை பாதுகாக்க 500 மின்சார பேருந்து !! அமைச்சர் சிவசங்கர் தகவல்..

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் 500 மின்சார பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

சென்னை வானகரத்தில் உள்ள டாடா நிறுவனத்தில் சார்பில், 101 வாடிக்கையாளர்களுக்கு மின்சார கார்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் சிவசங்கர் வாடிக்கையாளர்களுக்கு கார்களை வழங்கிய பின் மின்சார காரை சிறிது தூரம் ஓட்டி பார்த்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சுற்றுச்சூழலை பாதுகாக்க மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்துவது அவசியமாகிறது என கூறினார். அந்த வகையில் முதற்கட்டமாக சென்னையில் 500 மின்சார பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.

இத்திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தும் வகையில் கூடுதல் மின்சார பேருந்துகளை வாங்குவதற்கு நடவடிக்கை நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top