
Tamil Nadu
நிர்பயா திட்டத்தில் இன்று 500 பேருந்து சேவை தொடக்கம்..!! வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணை;
இன்றைய தினம் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் போக்குவரத்து துறையில் பல்வேறு விதமான முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதுவும் குறிப்பாக டெல்லி மாநிலத்தில் சுமார் 1500 மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
மேலும் அதற்கான ஒப்புதலையும் டெல்லி மாநில அரசு அளித்தது மேலும் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் மற்றும் பேட்டரி மாற்றும் நிலையங்களை அமைக்கவும் முடிவு எடுத்துள்ளதாக அறிவித்தது.
இந்தநிலையில் நம் தமிழகத்தில் மகளிர் பாதுகாப்பு வசதியுடன் செல்ல பேருந்து சேவை இன்று தொடங்கியுள்ளது. சென்னையில் மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு வசதியுடன் கூடிய சுமார் 500 பேருந்து சேவை இன்று தொடங்கப்பட்டது.
CCTV மற்றும் அவசர அழைப்பு பொத்தான் உடன் கூடிய பேருந்து சேவையை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். 136 போக்குவரத்து பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையையும் முதல்வர் வழங்கினார்.
