Connect with us

ஒரே பள்ளியில் 50 மாணவர்களுக்கு மர்ம காய்ச்சல், சிறப்பு முகாமில் அதிர்ச்சி

medical department

தமிழகம்

ஒரே பள்ளியில் 50 மாணவர்களுக்கு மர்ம காய்ச்சல், சிறப்பு முகாமில் அதிர்ச்சி

விராலிமலை பகுதி பள்ளிகளில் நடைபெற்ற காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாமில் 49 மாணவர்களுக்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டு அவர்களுக்கு மருந்து மாத்திரைகள் சுகாதாரத்துறை சார்பில் வழங்கப்பட்டு உடனடியாக மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டு தொடர்ந்து அவர்களை கண்காணிக்க மருத்துவத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

தமிழக மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை சார்பில் விராலிமலை சுற்றுப்பகுதி பள்ளிகளில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. இதில் மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் என குழுக்கள் அமைக்கப்பட்டு அந்த குழுவினர் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டனர். இதில் 49 மாணவர்களுக்கு காய்ச்சல் கண்டறியப்பட்டது.

கல்குடி, நம்பம்பட்டி,அத்திபள்ளம் அரசு உயர்நிலைப்பள்ளி, விராலிமலை தனியார் பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. மேலும் காய்ச்சல் சரியான உடன் பள்ளிக்கு மாணவர்களை அனுப்புமாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது

காய்ச்சலுடன் வீட்டுக்கு சென்ற மாணவர்களை கண்காணிக்க சுகாதாரத் துறையினர் முடிவு செய்துள்ளனர். மேலும் அவர்களுக்கு தொடர் காய்ச்சல் இருப்பின் ரத்த மாதிரியை பரிசோதனை செய்ய இருப்பதாக மருத்துவதுறையினர் தெரிவித்தனர். தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும் இந்த பரிசோதனை மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top