மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆசை உள்ள மாணவர்களுக்கு பெரும் தடையாக அமைந்துள்ளது நீட்தேர்வு. நீட் தேர்வானது மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வாக அமைந்துள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசும் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக தீர்மானம் எடுத்துள்ளது.
இந்த சூழலில் அரசு மருத்துவர்களுக்கு சில முக்கிய அறிவிப்புகளை சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. அதன்படி அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு தர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிறப்பு நிபுண மருத்துவ படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு தர உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
2021- 2022 ஆம் ஆண்டு சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது. 2021-2022 ஆண்டிற்கான 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க தடை இல்லாத பட்சத்தில் இந்த கல்வியாண்டில் அமல்படுத்தலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
2021- 2022 அறிவிப்பாணையில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வில்லை என அரசு மருத்துவர் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.