Connect with us

பள்ளிகளில் 50% மாணவர்கள்: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

Tamil Nadu

பள்ளிகளில் 50% மாணவர்கள்: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

b658acb920140bb5a741ed8c33f5081b

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக மூடப்பட்டு இருக்கும் நிலையில் விரைவில் பள்ளிகள் திறக்கும் நிலையில் உள்ளது. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து பஞ்சாப் உள்பட ஒரு சில மாநிலங்களில் ஏற்கனவே பள்ளிகள் திறக்கப்பட்டு விட்டன. இதனை அடுத்து செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க தயார் நிலையில் இருக்கிறோம் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின் படி தமிழகத்தில் கொரோனா காரணமாக அனைத்து பள்ளிகளிலும் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும் என்றும் 50 சதவீத மாணவர்கள் வகுப்புகளில் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். 

ஒரு வகுப்பில் 40 மாணவர்கள் இருந்தால் 20 பேருக்கு ஒரு நாளும், 20 பேருக்கு மறுநாளும் வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாகவும் சுழற்சி முறையில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார். முதல் கட்டமாக 9, 10, 11, 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் இதை அடுத்து மற்ற வகுப்புகளுக்கும் விரைவில் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top