கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திரையரங்குகளில் 50 சதவீதம் இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளித்து இருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 100 சதவீத இருக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது
ஆனால் மத்திய அரசு மற்றும் நீதிமன்றம் தெரிவித்த எதிர்ப்பு காரணமாக நேற்று மீண்டும் 50% இருக்கைகள் மட்டுமே தொடரும் என்று தமிழக அரசு அறிவித்தது. 100% இருக்கைகள் அனுமதி என்ற அரசாணை காரணமாக விஜய்யின் ’மாஸ்டர்’ திரைப்படம் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே அனுமதி என்று கூறப்பட்டுள்ளதால் திட்டமிட்டபடி ’மாஸ்டர்’ வெளியாகுமா? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது
அதேபோல் சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படம் வெளியாவதிலும் இதே சிக்கல் ஏற்பட்டுள்ளது இந்த நிலையில் மீண்டும் ’மாஸ்டர்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை என்பதும் ’மாஸ்டர்’ படம் ரிலீஸ் குறித்த தகவல்களை விரைவில் தயாரிப்பு தரப்பு உறுதி செய்யும் என்றும் கூறப்படுகிறது