Connect with us

அரசு மருத்துவர்களுக்கு முதுநிலைப் படிப்பில் 50% இட ஒதுக்கீடு சரியே!-உறுதி செய்தது உயர்நீதிமன்றம்;

govenrment doctors

செய்திகள்

அரசு மருத்துவர்களுக்கு முதுநிலைப் படிப்பில் 50% இட ஒதுக்கீடு சரியே!-உறுதி செய்தது உயர்நீதிமன்றம்;

அரசு மருத்துவர்களுக்கு முதுநிலைப் படிப்பில் 50% இட ஒதுக்கீடு சரியே!-உறுதி செய்தது உயர்நீதிமன்றம்;

முதுநிலைப் படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதற்கெதிராக ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டு தடை விதிக்குமாறு கூறப்பட்டது. ஆனால் வழக்கை விசாரித்த நீதிபதிகள் அரசு மருத்துவர்களுக்கு 50 இட ஒதுக்கீடு சரி என்று கூறியுள்ளது.

கிராமத்தில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் 30 சதவீதம் மதிப்பெண் வழங்க தடை இல்லை என்று கூறியுள்ளது. எம்டி, எம்எஸ் படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு சரியே என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவை இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று உறுதி செய்தது. தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தள்ளுபடி ஆனது.

முதுநிலை படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு மதிப்பெண் வழங்குவது எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டது. அரசு சாரா மருத்துவர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இட ஒதுக்கீடு, மதிப்பெண்களால் தனியார் மருத்துவமனை மருத்துவர்களின் வாய்ப்பு பறிப்பதாக குற்றசாட்டை வைத்தனர். இரண்டில் ஏதாவது ஒன்று தான் அரசு மருத்துவர்களுக்கு வழங்க வேண்டும் என மனுவில் மருத்துவர் சங்கம் கோரியிருந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி தண்டபாணி 50 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் 30 சதவீத மதிப்பெண் தர தடையில்லை என்று தீர்ப்பளித்தார். தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு தள்ளுபடி ஆனது உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர் நீதிபதிகள்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top