Connect with us

அந்தரத்தில் இருந்து சரிந்து விழுந்த ராட்டினம்: வைரல் வீடியோ!!

விபத்து

செய்திகள்

அந்தரத்தில் இருந்து சரிந்து விழுந்த ராட்டினம்: வைரல் வீடியோ!!

கடந்த சில நாட்களாக வட மாநிலங்களை பொருத்தவரையில் விபத்துக்கள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் பஞ்சாப் மாநிலத்தில் ராட்டினம் அந்திரத்தில் இருந்து கீழே விழுந்து விபத்துகுள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடந்த பொருட் காட்சியகத்தில் ராட்டினம் ஒன்று 80 அடி உயரத்திலிருந்து எதிர்பாராதவிதமாக அந்திரத்தில் இருந்து ராட்டினம் ஒன்று சரசரவென கீழே சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

இத்தகைய விபத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்த் நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

அதே சமயம் போதுமான முன்னேற்பாடுகளை செய்யவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். மேலும், விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், இதுகுறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top