மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு ரூ.50 லட்சம் அபராதமா?

10280f34a5d75d90c329e35f247bba93

மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு ரூபாய் 50 லட்சம் அபராதம் விதிக்க மருத்துவ கல்வி இயக்குனரகம் உத்தரவு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்பு படித்த மாணவர்கள் தங்களுடைய படிப்பு முடிந்ததும் இரண்டு ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் கண்டிப்பாக பணிபுரிய வேண்டும் என்பது மருத்துவ கல்வி இயக்குனரகத்தின் விதி என்பது குறிப்பிடத்தக்கது

ஆனால் ஒரு சில மாணவர்கள் தாங்கள் அரசு மருத்துவமனையில் பணிபுரிய விருப்பமில்லை என்று எழுதிக் கொடுத்ததாக தெரிகிறது. இது குறித்து அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கும் மருத்துவ கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது 
அதன்படி அரசு மருத்துவமனையில் பணிபுரிய விருப்பம் இல்லை என்று எழுதிக் கொடுத்த மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு ரூபாய் 50 லட்சம் அபராதம் விதிக்க உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த உத்தரவு மருத்துவ மாணவர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment