போதை ஊசி விற்பனை.. இளைஞர்கள் 5 பேர் கைது..!!!

திண்டிவனம் உட்கோட்ட பகுதிகளில் போதை ஊசி விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திண்டிவனம் பகுதியில் அண்மை காலமாக போதை ஊசி பயன்பாடு மற்றும் விற்பனை அதிகளவில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் காரணமாக போதை ஊசிகளை விற்பனை செய்யும் நபர்களை பிடிக்க மாவட்ட கண்காணிப்பாலர் ஸ்ரீநாதா உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

உச்சம் தொட்ட தங்கம் விலை: கண்ணீர் வடிக்கும் நகை பிரியர்கள்..!!

அதன் பேரில் திண்டிவனம் வசந்தபுரத்தை சேர்ந்த 31 வயதான சதாம் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளனர்.

அவரிடம் இருந்து போதை ஊசி தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த குளுக்கோஸ் பாட்டில்கள், 160 போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

பணக்கார வாழ்கை… 6 வயது சிறுவன் நரபலி.. டெல்லியில் கொடூரம்..!!

இந்நிலையில் கைதான சதாம் என்பவரிடம் விசாரணை நடத்தியதில், அதே பகுதியை சேர்ந்த மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் கஞ்சா, 10 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்தனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.