5 வயது சிறுவன் பட்டினியால் உயிரிழப்பு! யாரேனும் உணவு தராமல் கொடுமைப்படுத்தினார்களா?-போலீஸ் விசாரணை;

நாம் நாள்தோறும் உழைப்பது ஒரு சாண் வயிற்றுக்காக தான். ஏனென்றால் பசிப்பிணியை விட எந்த ஒரு நோயும் கொடுமையானதாக இல்லை என்பது தவிர்க்க முடியாத உண்மையாக காணப்படுகிறது. உணவிற்காகவே  இதற்காகவே பலரும் ஓடி ஓடி உழைக்கின்றனர்.

இந்த நிலையில் ஒரு சில இடங்களில் உணவின்றி பட்டினியால் உயிரிழப்புகளும் நிகழ்கிறது. இதனை விட கொடுமை என்னவென்றால் டிசம்பர் 15-ம் தேதியில் விழுப்புரம் மாவட்டத்தில் இறந்த நிலையில் சிறுவன் ஒருவன் மீட்கப்பட்டுள்ளார், மீட்கப்பட்ட அந்த சிறுவனை உடற்கூறு ஆய்வு செய்ததில் அவன் பட்டினியால் உயிரிழந்துள்ளதாக ஆய்வின் முடிவில் தகவல் வெளியானது.

டிசம்பர் 15ஆம் தேதி திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் சாலையோரம் நின்றிருந்த சலவை வாகனத்தில் 5 வயது சிறுவன் உடல் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. மீட்கப்பட்ட சிறுவனின் உடலை ஆய்வு செய்ததில் இத்தகைய வேதனையான சம்பவம் நிகழ்ந்துள்ளது தெரியவந்துள்ளது. அந்த 5 வயது சிறுவனுக்கு உணவு தராமல் யாரேனும் துன்புறுத்தினார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி கொண்டு வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment