Connect with us

5 வார்டுகளில் நாளை மறு வாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

Local body election 2

தமிழகம்

5 வார்டுகளில் நாளை மறு வாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

5 வார்டுகளில் நாளை மறு வாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று நடந்து முடிந்த நிலையில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேதப்படுத்துதல், பழுதடைதல் போன்ற பல்வேறு  புகார்கள் எழுந்தன. இந்த நிலையில் நாளை 5 வார்டுகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் சென்னை மாநகராட்சியில் உள்ள வண்ணாரப்பேட்டையில் வார்டு எண் 51, வாக்குச்சாவடி எண். 1174 மற்றும் பெசண்ட் நகரில் உள்ள வார்டு எண் 179, வாக்குச்சாவடி எண் 5059 நடைபெறும் என தெரிவித்துள்ளது.

இதனைதொடர்ந்து மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சியில் வார்டு எண் 17, வாக்குச்சாவடி எண் 17, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் வார்டு எண் 16, வாக்குச்சாவடி எண் 16 எம், 16 டபிள்யூ மற்றும் திருவண்ணாமலை நகராட்சியில் வார்டு எண் 25, வாக்குச்சாவடி எண். 57 ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் என தெரிவித்துள்ளது.

மேலும், இந்த 5 வார்டுகளிலும் 7 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top