திட்டமிட்டபடி 5 மாநில தேர்தல் நடத்தப்படும்! இன்று பிற்பகல் தேதி அறிவிப்பு!!

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி  யாராலும் மறக்க முடியாது. ஏனென்றால் ஏப்ரல் 6-ஆம் தேதி தான் நம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இவை நம் தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவில் ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றது.

அதன் படி தமிழ்நாடு, அண்டை மாநிலமான கேரளா, யூனியன் பிரதேசமான புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. நம் தமிழகத்தில் 10 ஆண்டுக்கு பின்னர் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ளது. ஒரு சில மாநிலங்களில் தொடர்ந்து ஆளும் கட்சியே ஆட்சி செய்து வருகிறது.

இந்த நிலையில் இது போன்று மற்றுமொரு தேர்தல் நடைபெற உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.  இந்த  5 மாநில தேர்தல் தேதி இன்று பிற்பகல் அறிவிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் நடைபெறவுள்ள தேர்தலுக்கான தேதி இன்று பிற்பகல் அறிவிக்கப்பட உள்ளது.

இன்று பிற்பகல் 03:30 மணிக்கு தேர்தல் ஆணையர்கள் தேர்தல் அட்டவணையை வெளியிடுகின்றனர். ஏனென்றால் நம் நாட்டில் எதிர்பாராத விதமாக மீண்டும் கொரோனா பாதிப்பு வேகமாக பரவிக்கொண்டு வருகிறது. அதனால் 5 மாநில தேர்தல் ஒத்தி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆயினும் 5 மாநில தேர்தல் திட்டமிடப்பட்டு நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment