5 மாநில தேர்தல்-பொதுக் கூட்டங்களுக்கு தடை! மேலும் பல தடை உத்தரவு; அதிரடி காட்டும் தேர்தல் ஆணையம்!

வருகின்ற பிப்ரவரி மாதம் இந்தியாவில் உள்ள ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் தேர்தல் ஆணையம் பல்வேறு விதிகளை விதித்து கொண்டே வருகிறது. அவற்றுள் இந்த 5 மாநில தேர்தலில் பொது கூட்டங்களுக்கு தடை விதித்து தற்போது அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

அதன்படி தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் ஜனவரி 22ஆம் தேதி வரை பேரணி, பொதுக் கூட்டங்கள் நடத்த தடை விதித்துள்ளது. உத்தரப் பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் மாநிலங்களில் பேரணிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் கூட்டங்களுக்கு தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அரசியல் கட்சிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் தேர்தல் ஆணையம் இத்தகைய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

இன்றுவரை விதிக்கப்பட்டிருந்த தடையை ஜனவரி 22ஆம் தேதி வரை நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் உள்அரங்குகளில் அதிகபட்சமாக 300 பேர் அல்லது 50% நபர்களுடன் மட்டுமே கூட்டங்கள் நடத்த அனுமதி அளித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment