இந்தியாவில் அதிக சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மாநிலமான உத்தர பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை தக்கவைத்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளில் 255 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சமாஜ்வாதி கட்சி 111 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடத்திலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. அப்னா தால் 12 இடங்களிலும், ராஷ்டிரிய லோக் தளம் 8 இடங்களிலும், பிற கட்சிகள் 14 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியை உறுதி செய்துள்ளது. மொத்தமுள்ள 117 தொகுதிகளில் அக்கட்சி 92 இடங்களில் வென்றுள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சி 18 இடங்களில் வெற்றி பெற்று, இரண்டாவது இடத்தில் உள்ளது. பா.ஜ.க 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சிரோன்மணி அகாலி தளம் 3 இடங்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி 1 இடத்திலும் சுயேச்சை 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
உத்தராகண்ட் மாநிலத்தில் 70 இடங்களில் பா.ஜ.க 47 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 19 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பகுஜன் சமாஜ் 2, சுயேச்சை 2 இடத்திலும் வென்றுள்ளன.
மணிப்பூர் மாநிலத்தில் 60 சட்டமன்ற தொகுதிகளில் பா.ஜ.க 32 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 5 இடங்களில் வென்றுள்ளது. ஐக்கிய ஜனதா தளம் 6 இடங்களில் வென்றுள்ளது. தேசிய மக்கள் கட்சி 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. நாகா மக்கள் முன்னணி 5 இடங்களில் வென்றுள்ளது. சுயேச்சைகள் 3 இடங்களிலும், நேஷனல் பீப்பிள் பார்ட்டி 7 இடங்களிலும் வென்றுள்ளன.
கோவா மாநிலத்தில் 40 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க 20 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 11 இடங்களில் வென்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சுயேட்சை 3 இடங்களிலும், மகாராஷ்டிராவாடி கோமந்த கட்சி 2 இடங்களிலும், கோவா பார்வர்டு கட்சி, புரட்சிகர கோன்ஸ் கட்சி ஆகியவை தலா ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.