நாட்டையே உலுக்கிய சர்ச்சை தொகுதிகளிலும் பாஜக முன்னிலை… எங்கு தெரியுமா?
தேசிய அளவில் பரபரப்புக்கு ஆளான லக்கிம்பூர் கெரி, ஹத்ராஸ் மாவட்டங்களில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.
உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் படுகொலை நடந்த லக்கிம்பூர் கெரி மற்றும் நாட்டையே உலுக்கிய பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்த ஹத்ராஸ் மாவட்டங்களில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பாஜக முன்னிலையில் உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளில் 263ல் பாஜக முன்னிலை பெற்றுள்ளது.
உ.பி.யில் எதிர்க்கட்சியான சமாஜ்வாதி 131 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும், பகுஜன் சமாஜ் 4 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.
பஞ்சாப்பில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 88 இடங்கலீல் ஆம் ஆத்மி, 16 இடங்களில் காங்கிரஸ், 10 இடங்களில் அகரலிதளம், 6 இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது.
உத்தரகாண்ட்டில் பாஜக 42 இடங்களிலும், காங்கிரஸ் 21 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. மணிப்பூரில் பாஜக 22 இடங்களிலும் காங்கிரஸ் 14 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.
