14 வயது சிறுமியை நண்பர்களுக்கு இறையாக்கிய காதலன்; 5 பேருடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம்!

சேலம் அருகே 14 வயது சிறுமியை கூட்டு பாலியல் குற்றம் செய்த ஐந்து
வாலிபர்கள் மீது ஆள் கடத்தல், போக்சோ வழக்குபதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் அருகே கருப்பூர் தேக்கம்பட்டி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி எட்டாம் வகுப்பு பயின்று வருகிறார். இதே பகுதியை சேர்ந்த வினித் என்பவர் மாளிகை கடையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை உள்ளது.

இந்த நிலையில் 14 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி,கடந்த சில தினங்களுக்கு முன் பள்ளி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்தபோது, சிறுமியிடம் , ஆசை வார்த்தைக் கூறி அழைத்து சென்று தனது நண்பர்களுடன் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக வீடு திரும்பிய சிறுமி தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவரது தந்தை, தனது மகளை சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அப்போது காவல்துறையினர் , சிறுமியிடம் நடத்திய விசாரணையில் , ஐந்து பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சேலம் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தந்தை புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வினித், விக்னேஷ், ஆகாஷ், சீனிவாசன், அருண்குமார் ஆகிய ஐந்து பேரையும் கைது செய்து , விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் , ஐந்து வாலிபர்கள் மீதும் ஆள் கடத்தல் மற்றும் போக்சோ வழக்குபதிவு செய்து பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி , சிறையில் அடைத்தனர்.

14 வயது சிறுமியை ஆசை வர்த்தைக் கூறி கடத்தி சென்று, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த ஐந்து வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.