அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லும் என உரிமையியல் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இதற்கு விரைவில் மேல் முறையீடு செய்வதாக சசிகலா கூறியுள்ளார்.
கொங்குமண்டலத்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்ட சசிகலா நேற்று மாலை நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோட்டின் மலை கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது.
அதிமுக பொதுச் செயலாளர் பதவியை அடிமட்ட தொண்டர்கள்தான் தேர்வு செய்ய வேண்டும் என எம்.ஜி.ஆர் கூறியதை யாரும் மாற்ற முடியாது எனக் கூறினார்.
தன்னை அதிமுக பதவியில் இருந்து நீக்கி ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அவர்கள் கூறியது செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பளித்ததையொட்டி இதற்கு எதிராக மேல்முறையீடு செய்ய போவதாக கூறினார்.
மேலும், தமிழக மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கை நீச்சயம் வெற்றி பெரும் என்றும் 4 அல்லது 5 நபர்கள் சேர்ந்து யாரையும் நீக்கிவிட முடியாது என்று சசிகலா கூறியுள்ளார்.