370 மரங்கள் வெட்டிய விவகாரம்: வனச்சரகர் உள்பட 5 பேர் கைது!

நம் தமிழகத்தை பொறுத்த வரையில் சட்டத்திற்கு புரம்பாக மரங்களை வெட்டும் நிகழ்வு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதவற்றை தடுக்க வனத்துறை மற்றும் அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்ட போதிலும் சற்றும் குறைந்த பாடில்லை.

அந்த வகையில் சுமார் 370 மரங்கள் வெட்டப்பட்ட விவகாரத்தில் வனச்சரகர் நவீன் குமார் கைது செய்யப்பட்டுள்ள சம்பவ பெரும் அதிர்ச்சியை கிளப்பி உள்ளது. நீலகிரி மாவட்டம் உதகையில் பல்வேறு வகை மூலிகை செடிகள் மற்றும் தாவரங்கள் வளர்கின்றனர்.

இந்த சூழலில் அனுமதியின்றி தாவரங்கள் வெட்டப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அப்போது தீட்டுக்கல் பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான 234 ஏக்கர் நிலத்தில் ரூ.48 லட்சம் மதிப்புள்ள மரங்கள் வெட்டப்பட்டதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

இதற்கிடையில் போலீசார் நடத்திய விசாரணையில் ஒன்றிய மண்வள ஆராய்ச்சி மையத்தில் அனுமதியின்றி 370 மரங்கள் வெட்டப்பட்டது விசாரணையில் கண்டுப்பிடிக்கப்பட்டது.

இத்தகைய செயலுக்கு உதவிய வனச்சரகர் நவீன் குமார் உட்பட 5 பேரை போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கிடுக்குப்புடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.