Connect with us

நேற்று வெடிகுண்டு வீசி, அரிவாளால் வெட்டிய 5 பேர் கைது!

கொலை

News

நேற்று வெடிகுண்டு வீசி, அரிவாளால் வெட்டிய 5 பேர் கைது!

நேற்று வெடிகுண்டு வீசி, அரிவாளால் வெட்டிய 5 பேர் கைது!

தற்போது கொலை என்பது சாதாரணமான ஒன்றாக காணப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்றைய தினம் புதுச்சேரியில் இரட்டைக் கொலை வழக்கு தொடர்பாக தற்போது 5 பேர் சிக்கியுள்ளனர்.

கொலை அதன்படி புதுச்சேரி மாநிலத்திலுள்ள வண்ணாரப்பேட்டையில் நேற்று நடந்த இரட்டை கொலை நடந்தது. இந்த கொலையில் சிறையில் உள்ள வினோத், தீனா, அருள் ஆகியோருக்கு உதவி செய்த 5 பேர் சிக்கினர்.

ரவுடி ரவி அவரது நண்பர் அந்தோணி நேற்று வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் கொல்லப்பட்டனர். ரவியுடன் அவருடைய நண்பர் அந்தோணி பேசிக்கொண்டிருக்கும்போது 5 பேர் கொண்ட கும்பல் வெடிகுண்டு வீசியது.

வெடிகுண்டு வீசியதில் அந்தோணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது நண்பர் ரவுடி ரவி தப்பியோடினார். தப்பியோடிய ரவுடி ரவியை 5 பேர் கொண்ட கும்பல் விரட்டி பிடித்து வெட்டிக் கொலை செய்தனர்.

போலீஸ் விசாரணையில் சிறையிலிருக்கும் மற்றொரு ரவுடி வினோத்துக்கு ரவுடி ரவிக்கும் இடையே விரோதம் இருந்தது தெரியவந்தது. ரவுடி வினோத் உத்தரவின்படி 5 பேர் கொண்ட கும்பல் சதி திட்டம் தீட்டி கொலை செய்துள்ளனர்.

இரட்டை கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top