Connect with us

அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 5% ஊதிய உயர்வு!!

சிறப்பு பேருந்து

தமிழகம்

அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 5% ஊதிய உயர்வு!!

தமிழகத்தில் அவ்வப்போது வேலை நிறுத்த போராட்டங்கள் நடைபெறும். அதில் பெரும்பாலும் போக்குவரத்து துறை ஊழியர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபடுவார்கள். அதிலும் குறிப்பாக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் சம்பள உயர்வு கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.

இது தொடர்பாக போக்குவரத்து துறையுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். இவ்வாறு உள்ள நிலையில் தற்போது போக்குவரத்து ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடித்தது போல் அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.

அதன்படி அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 5% ஊதிய உயர்வு அளிக்க ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இனி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சு வார்த்தை நடத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

ஊதிய உயர்வு ஒப்பந்த மூலம் ஓட்டுநர்களுக்கு ரூபாய் 2012 இல் இருந்து 7981 வரை ஊதிய உயர்வு கிடைக்கும் என தகவல் கிடைத்துள்ளது. நடத்துனர்களுக்கு ரூபாய் 1965 முதல் ரூபாய் 6640 வரையிலும் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு 9,329 வரையிலும் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அலுவலக பணியாளர்களுக்கு ரூபாய் 6646 வரையிலும், தொழில்நுட்ப மேற்பார்வையாளர்களுக்கு ரூபாய் 8,476 வரையிலும் ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பயணச்சீட்டு பரிசோதனைகளுக்கு ரூபாய் 4692 முதல் ரூபாய் 7916 வரை ஊதிய உயர்வு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top