புரட்டாசி மாத 5 நைவேத்தியங்கள் ரெசிப்பீஸ்! மிஸ் பண்ணாதீங்க!

1.கல்கண்டு சாதம்.

தேவையான பொருட்கள்:

பச்சரிசி 1 கப்

பால் 1லிட்டர்

கல்கண்டு 2கப்

நெய் 1/2கப்

முந்திரி திராட்சை தலா15

எலத்தூள் 1/2டீஸ்பூன்

குங்குமப்பூ 1சிட்டிகை(ஒரு கரண்டி பாலில் ஊற வைக்கவும்)

செய்முறை:

அரிசியுடன் பால்+2கப் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் குழைய வேகவிடவும்.வெந்ததும் கரண்டியால் நன்கு மசித்து கல்கண்டை பொடித்து சாதத்துடன் சேர்த்துக் கிளறவும்.

கல்கண்டு கரைந்து,சாதத்தோடு‌நன்றாகக்கலந்ததும் இறக்கவும்.

நெய்யில் பாதியளவைக் காயவைத்து முந்திரி, திராட்சை மை வறுத்து எடுக்கவும்.

இந்த நாளில் கலவை+மீதமுள்ள நெய்+ஏலப்பொடி+பாலில் கரைத்து குங்குமப்பூ ‌அனைத்தையும் கல்கண்டு சாதக் கவலையோடு சேர்ந்த கிளறி இறக்கவும்.

2.எள் சாதம்.

தேவையான பொருட்கள்:

பச்சரிசி 1 கப்

கடுகு 1/4டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் 2

கறிவேப்பிலை சிறிதளவு

எண்ணெய், நெய் தலா1டேபிள்ஸ்பூன்

உப்பு தேவையான அளவு

வறுத்து பொடிக்க

கருப்பு எள் 1/4கப்

தேங்காய் துருவல் 1டேபிள்ஸ்பூன்

காய்ந்த மிளகாய் 2

கடலைப்பருப்பு 2டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு 1டேபிள் ஸ்பூன்

செய்முறை:

அரிசியை உப்பு சேர்த்து உதிர் உதிராக வடித்து வைத்துக் கொள்ளவும்.வறுத்து பொடிக்க வேண்டியதை வெறும் வாணலியில் தனித்தனியாக

மொறு மொறுப்பாக வறுத்து மிக்ஸியில் பொடித்து க்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய்+நெய்யை ஒன்றாக சேர்த்து காயவைத்து கடுகு கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை தாளித்து சாதத்தில் கொட்டிஅதனுடன் வறுத்து அரைத்த பொடியைத்தூவி கிளறி இறக்கவும்.

3.மிளகுசீரக சாதம்.

தேவையான பொருட்கள்:

பச்சரிசி 1 கப்

நெய் 1டேபிள்ஸ்பூன்

கடுகு 1/2டீஸ்பூன்

முந்திரி 8

கறிவேப்பிலை சிறிதளவு

வெறும் வாணலியில் வறுத்து

பொடிக்க..

மிளகு சீரகம், துவரம் பருப்பு தலா

2டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் 1

கறிவேப்பிலை சிறிதளவு

செய்முறை:

அரிசியை உப்பு சேர்த்து உதிர் உதிராக வேகவைத்து எடுக்கவும்

1டீஸ்பூன் நெய்யில் கடுகு கறிவேப்பிலை முந்திரி ஆகியவற்றை தாளிக்கவும்.

சாதத்துடன் தாளித கலவை+பொடித்து வைத்துள்ள பொடி+மீதமுள்ள நெய்+தேவையான உப்பு ஆகியவற்றை சேர்த்துக்கிளறி இறக்கவும்.

பொங்கல் ரேஸில் விலகிய துணிவு.? சோலோவாக கெத்து காட்டும் விஜய்.?

4.கதம்ப சாதம்.

தேவையான பொருட்கள்:

பச்சரிசி 1 கப்

துவரம் பருப்பு 1/2கப்

கேரட் 1

பீன்ஸ் 6

முருங்கை க்காய்1

கத்தரிக்காய் 2

வாழைக்காய் பாதி

உருளைக்கிழங்கு 1

தக்காளி 3

சாம்பார் பொடி 3டீஸ்பூன்

பெருங்காயத்தூள் 1/2டீஸ்பூன்

மஞ்சள் தூள் 1/4டீஸ்பூன்

கறிவேப்பிலை+மல்லித்தழை சிறிதளவு

நெய் சிறிதளவு

கடுகு 1/2டீஸ்பூன்

உளுந்து 2டீஸ்பூன்

உப்பு எண்ணெய் தேவையான அளவு

புளி கோலிக்குண்டு அளவு.

செய்முறை:

அரிசி பருப்புடன் மஞ்சள் தூள்+உப்பு+பெருங்காயத்தூள் சேர்த்து 5கப் நீர் சேர்த்து நன்கு குழைய வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

காய்கறிகளை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.புளியை1கப் நீரில் கரைத்து வைக்கவும்.

ப்ரௌன் பேரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுந்து தாளித்து தக்காளி+காய்கறிகள் சேர்த்து வதக்கவும்.பிறகு சாம்பார் பொடி+உப்பு+புளிக்கரைசல் சேர் தந்து மிதமான தீயில் வேகவிடவும்.காய்கறிகள் நன்றாக வெந்ததும் அதனுடன் சாதக்கலவை+நெய்+கறிவேப்பிலை+மல்லித்தழை ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

5.கோதுமைரவை பொங்கல்.

தேவையான பொருட்கள்:

கோதுமை ரவை 1/2கப்

பால்11/2கப்

பொடித்த வெல்லம் 3/4கப்

ஏலத்தூள் 1/2டீஸ்பூன்

முந்திரி திராட்சை தலா8

கிராம்பு 1

நெய்4டேபிள் ஸ்பூன்

செய்முறை:

கோதுமை ரவை யை1டீஸ்பூன் நெய்யில் வாசம் வரை வறுத்து,1கப் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.நன்றாக வெந்ததும் அதில் பால் சேர்த்து பால் வற்றும் வரை நன்கு கிளறவும்(அடிப்பிடிக்காமல்)

பொடித்த வெல்லத்துடன் 1டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து சூடாக்கி.. வெல்லம் கரைந்ததும் வடிகட்டி கோதுமை ரவை க்கலவையோடுகலக்கவும்.அதனுடன் பாதியளவு நெய்+ஏலத்தூள்கிராம்பு சேர்த்து க்கிளறி இறக்கவும்.

மீதமுள்ள நெய் யில்முந்திரி+திராட்சை ஆகியவற்றை வறுத்து ரவைகலவையோடு சேர்த்துக் கிளறவும்….

இப்படி எல்லாம் செய்து பெருமாளுக்கு தளியல் போட

வாழ்வில் சகல சௌபாக்கியம் கிட்டும்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment