அண்ணா பிறந்தநாள்: புழல் சிறையில் மேலும் 5 கைதிகள் விடுதலை!!

தமிழகத்தில் ஆண்டுதோறும் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு ஆண்டுதோறும் சிறைகைதிகள் விடுதலை செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.

அந்த வகையில் நடப்பாண்டில் 75 ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. அதன் படி, புழல் மத்திய சிறையில் இருந்து 13 பேர், வேலூர் மத்திய சிறை 2 பேர் கடலூர் மத்திய சிறையில் இருந்து 5 பேர் விடுதலை செய்யப்பட்டதாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதே போல் திருச்சி மத்திய சிறையில் இருந்து 12 பேர் மதுரை மத்திய சிறையில் இருந்து 22 பேர் உட்பட மொத்தமாக 75 ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டதாக இருப்பதாக கூறப்பட்டு இருந்தது.

தற்போது அண்ணா பிறந்தநாளை ஒட்டி 3-ம் கட்டமாக புழல் சிறையில் இருந்து மேலும் 5 கைதிகள் விடுதலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.