குண்டு பாய்ந்து உயிரிழந்த சிறுவனின் குடும்பத்துக்கு 5 லட்சம் நிதியுதவி

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே பசுமலைப்பட்டி அருகே மத்திய அரசின் துப்பாக்கி சுடும் தளம் உள்ளது.

இங்கு மத்திய அரசின் சிஐஎஸ் எஃப் வீரர்கள் மற்றும் தமிழ்நாடு போலீசாரும் இணைந்து துப்பாக்கி சுடும் பயிற்சி எடுத்து வந்தனர்.

சில தினங்களுக்கு முன் போலீசார் பயிற்சி எடுத்துகொண்டிருந்தபோது அவர்கள் துப்பாக்கியில் இருந்து பாய்ந்த குண்டு 2 கிமீக்கு அப்பால் இருந்த சிறுவன் புகழேந்தியின் மீது பாய்ந்தது.

இந்த நிலையில் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் புகழேந்தி நேற்று இரவு உயிரிழந்தான்.

இதனால் அங்கு சில மணி நேரம் மக்கள் போராட்டம் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர் துப்பாக்கி தளம் அங்கிருந்து தற்காலிகமாக எடுக்கப்பட்டுள்ளது அது நிரந்தரமாக அப்புறப்படுத்தப்பட வேண்டும்.

மேலும் நிவாரண நிதி வேண்டினர் இதை ஏற்ற அதிகாரிகள் உரிய ஆவண செய்வதாக சொல்லி சென்றனர். சற்றுமுன் திமுக மாநிலங்களவை  உறுப்பினர் ரகுபதி மற்றும் அமைச்சர் மெய்யநாதன் உள்ளிட்டோர் சிறுவனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி 5 லட்சத்துக்கான காசோலையை நிவாரண நிதியாக சிறுவனின் குடும்பத்தாரிடம் வழங்கினர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment