News
5 வருடத்திற்குள் 5 லட்சம் எலக்ட்ரிக் வாகனங்கள்: முதல்வர் அறிவிப்பு

இன்னும் ஐந்து வருடங்களுக்குள் 5 லட்சம் எலக்ட்ரானிக் வாகனங்கள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் சற்று முன் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்
இந்தியாவில் டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களின் உற்பத்தி குறைக்கப்பட்டு எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி அதிகரிக்க ஏற்கனவே மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. எதிர்காலத்தில் எலக்ட்ரிக் வாகனங்கள் தான் இந்தியாவின் முக்கிய வாகனங்களாக இருக்கும் என்று கருதப்படுகிறது
சுற்றுச்சூழலுக்கு மிகுந்த பாதுகாப்பு என்பது மட்டுமின்றி பெட்ரோல் டீசல் தேவையும் இதனால் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன் பேட்டியளித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அவர்கள் ’இன்னும் 5 ஆண்டுகளில் டெல்லியில் 5 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் வகையில் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்
இதன் காரணமாக டெல்லியில் சுற்றுச்சூழல் மிகவும் பாதுகாக்கப்படும் என்றும் காற்றில் உள்ள மாசுகளின் அளவும் குறையும் என்றும் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி புதிய எலக்ட்ரிக் வாகனங்களால் பொருளாதாரம் மேம்படும் என்றும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்
டெல்லி மட்டுமின்றி இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் அடுத்த சில ஆண்டுகளில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும் என்றே கருதப்படுகிறது
