Connect with us

உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு 5 லட்சம் நிதி உதவி!: ஸ்டாலின் அறிவிப்பு;

stalin new16

தமிழகம்

உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு 5 லட்சம் நிதி உதவி!: ஸ்டாலின் அறிவிப்பு;

உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு 5 லட்சம் நிதி உதவி!: ஸ்டாலின் அறிவிப்பு;

இன்றைய தினம் உலகமெங்கும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த விசேஷ நாளில் தமிழகத்தில் இன்றைய தினம் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 266 ஆவது பிறந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. இதற்காக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினார். சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.

அதன் பின்னர் தமிழக முதல்வர் ஸ்டாலின் தர்மபுரியில் உயிரிழந்த விவசாய குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கினார். தர்மபுரி அருகே உயிரிழந்த விவசாயி கணேசன் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் நிதியை தமிழக முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

பாலவாடி  பகுதியில் மூன்று நாட்களாக போராட்டம் நடத்தி நடந்த நிலையில் விவசாயி கணேசன் உயிரிழந்தார் என்றும் கூறினார். கலைஞர் வழியில் செயல்படும் இந்த அரசு என்றென்றும் விவசாயிகளுக்கு உற்ற தோழனாக இருக்கும் என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top