உயிரிழந்த 22 பேரின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் நிதி உதவி!

ஆக்சிசன் கசிவால் உயிரிழந்த 22 பேரின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் நிதி உதவி அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்!
 
உயிரிழந்த 22 பேரின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் நிதி உதவி!

மக்கள் மத்தியில் ஆட்கொல்லி நோயாக வளர்ந்துள்ள கொரோனாக்கு எதிராக பல மாநிலங்களும் பல்வேறு விதிகளை விதித்துள்ளது. மேலும் இந்தியாவில் இதுவரை இரண்டு வகையான கொரோனா தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு அவை இந்தியாவில் உள்ள பல மாநில அரசு மருத்துவமனைகளுக்கு கொடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் மத்திய அரசின் சார்பில் மூன்று நாட்களுக்கு இந்தியா முழுவதும் தடுப்பூசி திருவிழா நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது சில மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதாக கூறப்படுகிறது.

oxygen

மேலும் சிகிச்சை அளிக்க கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் ஆக்சிஜனின் பற்றாக்குறையும் நிலவுவதாக கூறப்படுகிறது. இந்த பற்றாக்குறையிலும் ஒரு பகுதியில் ஆக்சிசன் கசிவினால் உயிரிழப்பு ஏற்பட்ட சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இச்சம்பவமானது மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நாசிக் மருத்துவமனையில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. மேலும் இந்த நாசிக் மருத்துவமனையில் ஆக்சிசன் டேங்கரில் ஏற்பட்ட கசிவினால் அங்குள்ள நோயாளிகள் 22 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

மேலும் அதற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாகக் பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ட்விட் செய்திருந்தார். இந்நிலையில் மகாராஷ்டிர மாநில முதல்வர் தற்போது நிதியுதவி அளித்துள்ளார். அதன்படி இந்த ஆக்சிசன் கசிவினால் உயிரிழந்த 22 பேரின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் நிதியுதவி மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.ஆக்சிசன் பற்றாக்குறை நிலவும் இச்சமயத்தில் இதுபோன்ற சம்பவம் நாடெங்கும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web