தங்களிடம் எது கிடைத்தாலும் வாயில் வைத்து சாப்பிடும் குணம் சிறுபிள்ளைகளின் பண்பாகும். இவர்களை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்வது பெற்றோர்களின் கடமையாகும். அவ்வப்போது சிறு பிள்ளைகளை கவனிக்காததால் பேரிழப்பு உருவாகிறது.
ஒரு சில நேரங்களில் உயிர் இழப்பும் ஏற்படுகிறது. இந்த நிலையில் சிறுமி ஒருவர் பிளீச்சிங் பவுடர் சாப்பிட்டு பெரும் அவதிப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தமிழகத்தில் புதிதாக உருவாகியுள்ள தென்காசி மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது.
அதன்படி தென்காசி மாவட்டத்தில் சிறுமி ஒருவர் தவறுதலாக பிடித்துக்கொண்டு சாப்பிட்டுள்ளார். அதன்பின்னர் அவரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடல்நலம் மெல்ல மெல்ல சரியானதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த சிறுமிக்கு நிதியுதவி கிடைத்துள்ளது. அதன்படி தென்காசியில் பிளீச்சிங் பவுடர் சாப்பிட்டதால் உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி வழங்கினார்.
5 லட்சம் ரூபாயை தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். தென்காசியில் தவறுதலாக பிளீச்சிங் பவுடர் சாப்பிட்டதால் உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமி உடல் நலம் தேறி உள்ளார்.சென்னையில் சிகிச்சை பெற்று உடல் நலம் தேறிய சிறுமி இசக்கியம்மாள் பெற்றோருடன் முதல்வரை நேரில் சந்தித்தார்.