Connect with us

கோர விபத்து: மரத்தின் மீது பேருந்து மோதி 5 பேர் படுகாயம்..!!!

accident 1

தமிழகம்

கோர விபத்து: மரத்தின் மீது பேருந்து மோதி 5 பேர் படுகாயம்..!!!

திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் அரசு பேருந்து மரத்தின் மீது மோதியதில் 25-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குடவாசல் அடுத்த நன்னிலம் பகுதிக்கு பேருந்து ஒன்று சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பேருந்தின் எதிரே டாடாஏசி வந்ததால் பேருந்தை திருப்பியதாக கூறப்படுகிறது. அங்கு பள்ளம் இருந்ததால் திடீரென தூங்குமூச்சி மரத்தில்  பேருந்து பயங்கரமாக மோதியதாக கூறப்படுகிறது.

இதனிடையே பேருந்தில் 30-க்கும் மேற்பட்டவர்கள் பயணித்த நிலையில் 5 பேர் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் தற்போது நன்னிலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top