Connect with us

திண்டுக்கல் கோயிலில் திருடப்பட்ட 5 சிலைகள் மீட்பு; 4 பேர் கைது!!!

statues

தமிழகம்

திண்டுக்கல் கோயிலில் திருடப்பட்ட 5 சிலைகள் மீட்பு; 4 பேர் கைது!!!

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த சில நாட்களாக, சிலைகளை மீட்பதில் அதிரடி காட்டி வருகின்றனர். அந்த வகையில் வடமதுரை ஆதிநாத பெருமாள் ரங்கநாயகி அம்மாள் கோயிலில் இருந்து திருடப்பட்ட சிலைகளை மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்தில் 4 பேர் சிலைகளை கடத்தி விற்பனை செய்யவுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் 4 பேர் இத்தகைய சம்பவத்தில் ஈடுப்பட்டது தெரியவந்தது.

குறிப்பாக 4 அதிகாரிகள் சிலைகளை வாங்குவது போல் நாடகமாடி கடந்த 2007-ம் ஆண்டு திருடப்பட்ட சிலைகளை மீட்டுள்ளனர். அதன் படி பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி,சந்திரசேகரர், பார்வதி ஆகிய சிலைகளை கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில் கைதான 4 பேரிடமும் நடத்திய விசாரணையில் 5 சிலைகளையும் சுமார் 12 கோடி 5 லட்சத்துக்கு விற்க முயன்றதாக தெரிவித்துள்ளனர். அதோடு கைதானவர்களிடன்  விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top