Connect with us

இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோவர்ஸ் கொண்ட 5 ஹீரோயின் லிஸ்ட் இதோ !

article image 1

பொழுதுபோக்கு

இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோவர்ஸ் கொண்ட 5 ஹீரோயின் லிஸ்ட் இதோ !

ஆன்லைனில் இணையதள செயலிகளில் ஒன்றான இன்ஸ்டா செயலி தற்போது பலர் கவர்ந்து முன்னணியில் உள்ளது. முன்னணி பிரபலங்கள் நடிகை நடிகர்கள் இன்ஸ்டாகிராமில் தனக்கு என ஒரு பக்கத்தை வைத்து அதில் அவர்களது புகைப்படத்தை பதிவிட்டு வருகின்றனர். தற்போழுது அதிக ஃபாலோவர்களை கொண்ட தென்னிந்திய நடிகை பட்டியல் வெளியாகியுள்ளது.

முதல் 5 நடிகைகளின் பட்டியலை மறப்போம் …

1. ராஷ்மிகா மந்தண்ணா – 32.8 மில்லியன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தெலுங்கு சினிமாவில் உருவான கீதா கோவிந்தம் படத்தின் மூலம் என்ட்ரி ஆகி ரசிகர்கள் மனதில் கொள்ளை அடித்தார். அதை தொடர்ந்து கார்த்திக் நடிப்பில் தமிழில் வெளிவந்த சுல்தான் படத்தின் படத்தில் இவருக்கு பெரும் ஆதரவு கிடைத்தது. அதோடு அண்மையில் வெளிவந்த புஷ்பா படம் வசூலை வாரிக் குவித்தது மட்டுமல்லாமல் படவாய்ப்புகளும் குவிய தொடங்கியது.

rashmika mandanna pink saree look photos main

2. சமந்தா – 24.3 மில்லியன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான சமந்தா முதலில் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தனது திரை பயணத்தை தொடங்கினார்.இவர் தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் முன்னனி நடிகையாக நடித்து வருகிறார். தற்போழுது பாலிவுட்டிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.சமந்தா முன்னணி நடிகர்களான விஜய், சிவகார்த்திகேயன், சூர்யா,விஷால் என அனைவருடன் ஜோடியாக நடித்துள்ளார்.

samantha 1645505784 1

3. காஜல் அகர்வால் – 23.5 மில்லியன்

தமிழ் சினிமாவில் 2008ஆம் ஆண்டு வெளியான பரத் நடித்த பழனி என்ற திரைப்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் காஜல் அகர்வால். அதை தொடர்ந்து முன்னணி நடிகரான அஜித், விஜய் , மகேஷ் பாபு, கார்த்தி என அனைவருடன் நடித்துள்ளார். கமல்ஹாசன் மற்றும் எஸ் ஷங்கர் கூட்டணியில் இருந்து பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் “இந்தியன் 2” காஜல் அகர்வால் கலந்துகொள்ள உள்ளார்.

kajal

4. ரகுல் பிரீத் சிங் – 22.2 மில்லியன்

ரகுல் பிரீத் சிங் இந்திய சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு புகழ் பெற்ற வடிவழகி மற்றும் திரைப்பட நடிகை ஆவார். இவர் 2009-ஆம் ஆண்டு ஒரு கன்னட திரைப்படத்தில் நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கினார்,ரகுல் பிரீத் சிங் பிறப்பால் ஒரு பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்தவர்.ரகுல் பிரீத் சிங் நடித்த கிள்ளி என்ற கன்னட திரைப்படம் விமர்சனம் ரீதியாக மிக பெரிய வெற்றி பெற்றுள்ளது. இப்படத்தில் இவரது கதாபாத்திரம் பலரால் பாராட்டப்பட்டது.

Rakul Preet Singh graces Saina Nehwals wedding reception 06

5. பூஜா ஹெக்டே – 21.2 மில்லியன்

2012ம் ஆண்டு இயக்குனர் மிஸ்க்கின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் முகமூடி,இந்த படத்தில் ஹீரோவாக ஜீவா , அறிமுக நாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.இத்திரைப்படம் தான் முதல் தமிழ் சூப்பர் ஹீரோ திரைப்படமாகும். தமிழ் படத்தை தொடர்ந்து “ஒக்க லைலா கோசம்” என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார்.

poojaa

ஷாருக்கானின் ஜவான் படப்பிடிப்பு சென்னையில்லையா ? கேமியோவாக வரும் தீபிகா படுகோன் !

தெலுங்கு திரைப்படத்தினை தொடர்ந்து 2016-ம் ஆண்டு “மோஹன்ஜோ தாரோ” என்ற ஹிந்தி திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது , ஹிந்தி திரையுலகில் நன்கு நடித்து முன்னேறி பல முன்னணி நடிகர்களுடன் பணியாற்றி இந்திய அளவில் பிரபலமாகியுள்ளார்.

மாடலிங் துறையில் அதிக ஈடுபாடுடைய பூஜா ஹெக்டே 2010 ஆம் ஆண்டு “மிஸ் யூனிவெர்ஸ் இந்தியா” என்ற அழகு போட்டியில் இரண்டாம் இடத்தை தட்டி தூக்கினார். முகமூடி படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து தான் சமீபத்தில் தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top