வாத்து பண்ணையில் 5 சிறுமிகளுக்கு வன்கொடுமை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

புதுச்சேரி அடுத்த வில்லினூர் சாத்தமங்களம் பகுதியை சேர்ந்தவர் கன்னியப்பன். இவர் வாந்து பண்ணை நடத்தி வந்ததாக தெரிகிறது. இவரது மகன் மற்றும் உறவினர்கள் வாத்து பண்ணையை கவனித்து வந்தனர்.

இந்நிலையில் வாத்துகளை மேய்ப்பதற்காக புதுச்சேரி ஒட்டியுள்ள தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிறுமிகளை வைத்து வாத்து மேய்க்க வைத்ததாக தெரிகிறது. அதோடு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு சித்தரவதைகள் செய்ததாக தெரிகிறது.

கிறிஸ்துமஸ் பண்டிகை! 600 சிறப்பு பேருந்துகள் – தமிழக அரசு!!

இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் இருக்கும் பொதுமக்கள் குழந்தைகள் நல காப்பகத்திற்கு தகவல் கொடுத்தனர். பின்னர் அதிகாரிகள் குழந்தைகளிடம் விசாரணை நடத்திய போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

சிறுமிகளுக்கு பாலியியல் தொந்தரவு கொடுத்தது விசாரணையில் அம்பலமானது. இந்த வழக்கானது கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் நடைப்பெற்று வந்த நிலையில் போக்சோ சிறப்பு நீதிமன்றம் இன்றைய தினத்தில் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மக்களே அலர்ட்! டிச.25ம் தேதி இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

அதன் படி, குற்றம் சாட்டப்பட்டுள்ள கன்னியப்பன், அவரது மகன் ராஜ் குமார், உறவினர்கள் பசுபதி, ஐயனார் உள்ளிட்ட 7 பேருக்கு சாகும் வரையில் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிகளில் ஒருவருக்கு ரூ. 7 லட்சம், மற்ற சிறுமிகளுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.