Connect with us

நாகை டூ இலங்கை; கடத்த முயன்ற ஐந்து மீனவர்கள் கைது! எதுன்னு தெரியுமா?

kaithu 1

செய்திகள்

நாகை டூ இலங்கை; கடத்த முயன்ற ஐந்து மீனவர்கள் கைது! எதுன்னு தெரியுமா?

நாகை டூ இலங்கை; கடத்த முயன்ற ஐந்து மீனவர்கள் கைது! எதுன்னு தெரியுமா?

இந்தியாவிலேயே மிகவும் ஆபத்தான தொழில் என்றால் அதனை மீன்பிடித்தொழில் என்றே கூறலாம். அவர்கள் கடலுக்கு சென்றால் திரும்பி வருவது கேள்விக்குறியான ஒன்றாக காணப்படும்.

அதே வேளையில் தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றால் அவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்தார்கள் என்று கூறி இலங்கை கடற்படையினர் பல நேரங்களில் கைது செய்துகொண்டு சிறையில் அடைக்கின்றனர்.

ஒரு சில நேரங்களில் அவர்களை கடலுக்குள் தத்தளிக்க விடுகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது ஐந்து மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால் இவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்க வில்லை மாறாக கஞ்சா கடத்த முயன்றதாக தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி நாகை துறைமுகத்திலிருந்து விசைப்படகுகள் மூலம் இலங்கைக்கு சுமார் 400 கிலோ கஞ்சாவை கடத்த முயன்ற 5 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விசைப்படகில் மறைத்து கடத்தப்பட்ட ரூபாய் 4 கோடி மதிப்புள்ள 400 கிலோ கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர். கைதான 5 மீனவர்களிடம் இருந்து ரூபாய் 20 லட்சம் மதிப்புள்ள விசைப்படகு, 4 பைக்குகளை பறிமுதல் செய்தது போலீஸ்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top