Connect with us

5 மாவட்டங்களில் “மிக கனமழை” பெய்யும் – வானிலை மையம் எச்சரிக்கை!!!

rain 2

தமிழகம்

5 மாவட்டங்களில் “மிக கனமழை” பெய்யும் – வானிலை மையம் எச்சரிக்கை!!!

வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே தருமபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.

அதே போல் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, கரூர், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 4 தினங்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.

சென்னையை பொருத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top