அந்தமான் அருகே அடுத்தடுத்து 5 முறை நிலநடுக்கம்!!

அந்தமான் அருகே அடுத்தடுத்து 6 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த சில நாட்களாக இயற்கை சீற்றங்கள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு மற்றும் சுனாமி போன்றவைகள் பலப்பகுதிகளில் நடந்து கொண்டு வருகிறது.

இந்நிலையில் காலையில் 11 மணிக்கு அந்தமானில்  ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.4- ஆகவும் பதிவாகியுள்ளதாக தெரிகிறது. தற்போது தொடர்ந்து பிற்பகல் 1.55, 2.06, 2.37, 3.02 மணிகளில் 5 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

காலையில் அந்தமான் அருகே நடுக்கடலில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் பிற்பகல் சுமார் 5 முறை அந்தமானில் நடுக்கடலில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் சுனாமி ஏற்படும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அதே போல் ஜம்மு – காஜ்மீரிலும் நண்பகல் 12 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment