அதிக கட்டணம் வசூலிப்பு.. 49 ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம்..!!

தமிழகத்தில் கிறிஸ்மஸ் மற்றும் அரையாண்டு விடுமுறையை முன்னிட்டு ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர். இதன் காரணமாக ஆம்னி பேருந்துகளின் கட்டணம் என்பது உயர்ந்து காணப்படுகிறது.

குறிப்பாக வழக்கத்தை விட 3 மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது. அதன் படி, நாளை திருநெல்வேலியில் இருந்து சென்னை வருவதற்கு 1,500 ரூபாய் அரசு சார்பில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ரூ.3500 வரையில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதே போல் கோவையில் இருந்து சென்னை வருபவர்களுக்கு ரூ.1000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் ஆம்னி பேருந்துகளில் ரூ.3000 வரையில் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது..

இதனை தொடர்ந்து திருச்சியில் இருந்து சென்னை வருபவர்களுக்கு ரூ.700 கட்டணம் என்ற சூழலில் ரூ.2,300 வரையில் நிர்ணயிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பலர் புகார் கொடுத்தன் அடிப்படையில் தற்போது வரையில் 49 பேருந்துகள் மீது புகார் அளிக்கப்பட்டது.

இதன் காரணமாக ரூ.92,500 ரூபாய் பேருந்துகள் மீது கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. அதே போல் 9 பயணிகள் அளித்த புகாரின் அடிப்படையில் ரூ. 9,200 வசூலித்து கட்டணம் திருப்பி வழங்கப்பட்டிருப்பதாக போக்குவரத்து துறையின் சார்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.