மீண்டும் சோகம்!! சென்னையில் விசாரணை கைதி தற்கொலை..!!

சென்னை ஐயப்பாக்கத்தில் போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதுசெய்யப்பட்ட குற்றவாளி ஒருவர் 3-வது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஐயப்பாக்கத்தில் போதைப்பொருள் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் படி, ஐதராபாத்தைச் சேர்ந்த ராயப்பா ராஜு அந்தோணி என்பவரை போலீசார் சந்தேகத்தில் பேரில் விசாரணை நடத்தினர்.

அப்போது கிட்டத்தட்ட 48 கிலோ போதைப்பொருளை அவரிடம் பறிமுதல் செய்தனர். பின்னர் சென்னை மண்டலத்தில் அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

இதனையடுத்து அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போதை பொருள் கடத்தி பிடிப்பட்ட ஓட்டுனர் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment