குறைந்த பட்சம் 48 மணி நேரத்துக்கு தேவையான ஆக்சிஜன் இருக்க வேண்டும் – மத்திய சுகாதாரத்துறை

தற்போது கொரோனாவின் மூன்றாவது அலையில் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஊசி பாதுகாப்பானது என்றாலும் ஊசி செலுத்தியவர்களும் இந்த கொரோனா பாதிப்படைந்து வருகின்றனர்.

இருப்பினும் ஊசி செலுத்தி கொள்வதால் பெரிய அளவில் கொரோனா வந்தாலும் ஒன்றும் பிரச்சினை இருக்காது என சொல்லப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு தற்போது அதிகம் இருந்து வருகிறது. இந்த பாதிப்பு பெரு நகரங்களில் அதிகம் இருந்து வருகிறது.

தற்போது சிறு நகரங்களுக்கும் முந்தைய டெல்டா வைரஸை போல பரவ தொடங்கி விட்டது. தற்போதைய கொரோனாவில் சிலருக்கு ஓமிக்ரான் வைரசும் பரவியுள்ளது.

இந்நிலையில் ஆபத்துக்களை தடுக்க எந்த நேரமும் மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் சரியான அளவில் ஆக்சிஜன் சிலிண்டர்களை கையிருப்பு வைத்துக்கொள்ள வேண்டும் என மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment