46 அடி மீன் தொட்டி வெடித்து சிதறியதால் பரபரப்பு.. 1500 வகை மீன்களின் கதி என்ன? அதிர்ச்சி புகைப்படம்!

பெர்லின் நகரில் 46 அடி உயரத்தில் வைக்கப்பட்டிருந்த மீன் தொட்டி ஒன்று வெடித்து சிதறியதை அடுத்து அந்த பகுதியே போர்க்களம் போல் காணப்படுகிறது.

பெர்லின் நகரில் 1500 கவர்ச்சியான மீன்கள் அடங்கிய பிரம்மாண்டமான மீன் தொட்டி ஒன்று வைக்கப்பட்டிருந்தது. இந்த மீன் தொட்டியில் ஒரு மில்லியன் லிட்டர் தண்ணீரில் இருந்ததாகவும் 1500 கவர்ச்சிகரமான மீன்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

fishtank1இந்த நிலையில் நேற்று திடீரென இந்த மீன் தொட்டி வெடித்து சிறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த மீன் தொட்டி வெடித்து சிதறியதால் கண்ணாடித்துகள்கள் சாலையில் சிதறிக் கிடந்ததாகவும், இதனால் இருவருக்கும் காயம் என்றும் கூறப்படுகிறது. இந்த மீன் தொட்டியில் இருந்த மீன்கள் அனைத்தும் என்ன ஆனது என்பது குறித்து தீயணைப்பு படையில் செய்தி தொடர்பாளர் தெரிவிக்க மறுத்துவிட்டார். இருப்பினும் சம்பவ இடத்திற்கு உடனடியாக தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்பு நாய்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

மீன் தொட்டி வெடித்ததற்கு என்ன காரணம் என்பது குறித்து இன்னும் தெளிவாக கண்டுபிடிக்கவில்லை. இருப்பினும் அதிக வெப்பம் காரணமாக இந்த மீன் தொட்டி வெடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

fishtank3

இந்த நிலையில் இந்த மீன் வெடித்ததை அடுத்து அருகில் உள்ள கடைகள் மற்றும் விடுதிகள் இருந்தவர்கள் காலி செய்யட கேட்டுக்கொள்ள பட்டிருப்பதாகவும் அவர்களுக்கு மாற்று ஏற்பாடு வழங்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.