
Tamil Nadu
45-வது கோடை விழா: 6 நாள் வசூல் எத்தனை லட்சம் தெரியுமா?
கொரோனா பரவல் காரணமாக சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கோடை விழா நடைபெறாத நிலையில் இந்தாண்டு கடந்த மே 25-ஆம் தேதி கோடைவிழா கலைக்கட்டியது. சுற்றுலாப்பணிகளை கவரும் வகையில் 5 லட்சம் மலர்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
ஏற்காட்டில் ஆண்டுதோறும் மே மாதங்களில் கோடை நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகளாக விழா நடைபெறாத நிலையில் 45வது கோடை விழா தொடக்கம் மீண்டும் தொடங்கியது.
அமைச்சர் கே.என் நேரு, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மற்றும் மதிவேந்தன் இதில் கலந்துகொண்டு விழாவை தொடங்கி வைத்தனர். கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் இதமான குளிர்ச்சிக்கு நடுவே சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலர், பழம் கண்காட்சி அமைக்கப்பட்டது.
கலை பண்பாட்டுத்துறை சார்பில் கலை நிகழ்ச்சிகள், இளைஞர்களுக்கான கை பந்து, கால் பந்து ,கிரிக்கெட், கபடி போன்ற விளையாட்டுப்போட்டிகள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில் சுமார் 8-நாட்கள் கோடை விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த 6 நாட்களாக சுமார் ரூ.20 லட்சம் நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
