45வது சென்னை புத்தகக்கண்காட்சி: ரிப்பன் வெட்டி முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைப்பு!
பிப்ரவரி 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் அனைத்து விதமான கட்டுப்பாடுகளும் திரும்பப் பெறப்பட்டது. ஆனால் புத்தகக் கண்காட்சி நடத்தபடாமல் இருந்தது. இதற்காக பபாசி சார்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து புத்தக கண்காட்சி நடத்த கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில் பிப்ரவரி 16ஆம் தேதி முதல் புத்தக கண்காட்சி நடத்த அனுமதி அளிப்பதாக தமிழக அரசு கூறியுள்ளது. சென்னை புத்தகக் கண்காட்சி இன்று தொடங்க உள்ளது. இதனை தமிழக மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என்ற அறிவிப்பும் ஏற்கனவே வெளியானது.
இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னை புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைத்தார். 45 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் தொடங்கி வைத்தார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்.
மார்ச் 6ஆம் தேதி வரை காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை சென்னை புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. சுமார் 800 அரங்குகளில் ஒரு லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
இதில் மாணவ மாணவிகளுக்கு நுழைவு கட்டணம் இலவசம் என்றும் மீதமுள்ளவர்களுக்கு நுழைவு கட்டணமாக 10 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
