Connect with us

45- வது சென்னை புத்தகக் கண்காட்சி நாளையுடன் நிறைவு !!

book fair

தமிழகம்

45- வது சென்னை புத்தகக் கண்காட்சி நாளையுடன் நிறைவு !!

45- வது சென்னை புத்தகக் கண்காட்சி நாளையுடன் நிறைவு !!

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் அமைந்துள்ள 45- வது புத்தகக் கண்காட்சியை தமிழக முதல்வர் கடந்த மாதம் 16-ந் தேதி தொடங்கி வைத்தார்.

இந்த புத்தகக் கண்காட்சி சுமார் 19 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் சுமார் 800 அரங்குகள் அமைக்கப்பட்ட இந்த புத்தக கண்காட்சி இன்றுடன் 18 நாட்கள் நிறைவடைந்து விட்டன.

இந்நிலையில் மார்ச் 6-ஆம் தேதியுடன் 19 நாட்கள் நிறைவடைவதால் நாளையுடன் 45- வது புத்தகக் கண்காட்சி முடிவடைகிறது.

இந்த புத்தகக் கண்காட்சியில் வரலாற்று நூல்கள், சுயமுன்னேற்ற நூல்கள், ஆங்கில நாவல்கள், நவீன இலக்கிய சரித்திர நாவல்கள், குழந்தைகளுக்கான அறிவுத்திறன் சார்ந்த புத்தகங்களை அதிகமாக வாங்குவதாக தெரிவிக்கின்றனர்.

மேலும், இதுவரையில் 12 லட்சம் வாசகர்கள் புத்தகக் கண்காட்சிக்கு வருகை தந்ததாகவும் நாளை கடைசி நாள் என்பதால் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top