45- வது புத்தகக் கண்காட்சி: மொத்த விற்பனை இத்தனை கோடியா ?
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் 45-வது புத்தகக் கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது. இந்த புத்தக கண்காட்சி பிப்ரவரி 16-ம் தேதி தொடங்கி மார்ச் 6 வரை நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனையை செய்யப்பட்டன.
இதில் 1000 அரங்குகள் வரை அமைக்க திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது 800 அரங்குகளில், 500 பதிப்பகங்கள் மூலம் 1 லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் விற்னை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டன.
அந்த வகையில் காலை 11 மணி முதல் 8 மணி வரை புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. இதில் கடந்த மார்ச் 6 ஆம் தேதி மட்டும் இரவு 10 மணியுடன் நிறைவு பெற்றது. இதனிடையே நெல்லை புத்தக திருவிழா தொடக்க விழா நேற்று காலை நடந்தது. இதில் கலந்து கொண்ட சபாநாயகர் அப்பாவு பேச தொடங்கினார்.
அதில் தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற 9 மாதங்களில் இந்தியாவிலேயே சிறந்த முதல்வர் என்ற பெருமையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெற்றுதாகவும், இந்த புத்தக கண்காட்சியில் ரூ.12 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டதாக கூறினார்.
