மாவட்ட வாரியாக நிலவரம்: தமிழ்நாட்டில் 4517 பாசன ஏரிகள் நிரம்பின!

தமிழகத்தில் பெய்து வரும் கன மழையால் பல அணைகளும்,ஆறுகளும், ஏரிகளும் நிரம்பி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் தற்போது 4517 ஏரிகள் நிரம்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏரி

அதன்படி தமிழ்நாட்டில் பரவலாக பெய்யும் கனமழையால் பொதுப்பணித்துறையின் பராமரிப்பில் உள்ள 4517 பாசன ஏரிகள் நிரம்பியுள்ளன. தமிழ்நாட்டில் 2692 பாசன ஏரிகள் 76 சதவீதம் முதல் 99 சதவீதம் வரை முழு கொள்ளளவை எட்டி நிரம்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

2163 பாசன ஏரிகள் 76 சதவீதம் முதல் 99 சதவீதம் வரை நிரம்பியுள்ளன. 2163 ஏரிகள் 26 சதவீதம் முதல் 59 சதவீதம் வரை கொள்ளளவை எட்டியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 567 ஏரிகளில் 344 ஏரிகள் தனது முழு கொள்ளளவை எட்டி 100% நிரம்பியுள்ளன.

மதுரை மாவட்டத்தில் மொத்தமுள்ள 1340 ஏரிகளில் 577 ஏரிகள் நிரம்பி மறுகால் பாய்கின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தமுள்ள 1131 ஏரிகளில் 268 ஏரிகள் தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளன.

ஏரிகள்

தென்காசி மாவட்டத்தில் மொத்தமுள்ள 543 ஏரிகளில் 340 ஏரிகள் 100% நிரம்பி மறுகால் பாய்கின்றன. தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 640 ஏரிகளில் 450 ஏரிகள் முழுவதும் நிரம்பி உள்ளன.

திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 578 ஏரிகளில் 248 ஏரிகள் முழுவதுமாக நிரம்பி உள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தமுள்ள 335 ஏரிகளும் தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் 507 ஏரிகளில் 273 ஏரிகள் தனது முழு கொள்ளளவை எட்டி 100% நிரம்பி உள்ளன என்று பொதுப்பணித்துறை கூறியுள்ளது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print